தர்மபுரி மாவட்டம் லளிகம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மிட்டாரெட்டிஅள்ளிக்கு செல்லும் சாலையில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த உயர்கோபுர மின்விளக்கு பழுதாகி பல மாதங்களாக எரியாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த உயர் கோபுர மின் விளக்கை எரிய செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், தர்மபுரி.