பழுதடைந்த மின்கம்பம்

Update: 2022-08-15 15:04 GMT

கோவை நாயக்கன்பாளையம் அவ்வை நகரில் பழுதடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று நிற்கிறது. அதில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன், அந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்