ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-15 14:13 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி-திருமருகல் இடையே மெயின் சாலையில் காந்தி நகர் பகுதியில் இரும்பு மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் அடிப்பகுதி முழுவதும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் வளைந்து உள்ளதால் இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் சாய்ந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியை பொதுமக்கள் அச்சத்துடனேயே கடந்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

- பொதுமக்கள், காந்தி நகர்

மேலும் செய்திகள்