நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா கீழ்வேளூர் ஒன்றியம் வடக்குபனையூர் ஊராட்சி இளவத்தடி கிராமத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இவை வீடுகளின் மேற்கூரையை உரசி கொண்டு செல்வதால் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுகிறது, விபத்துகள் ஏற்படவும் வாய்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அஞ்சுகின்றனர்.இதுபற்றி, பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள் தகுந்த நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், இளவத்தடி