யாருக்கும் பயன்படாத மின்மாற்றி

Update: 2022-06-24 10:48 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பள்ளிக்கரணை மின் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக குறைந்த அளவிலேயே மின்சாரம் கிடைக்கிறது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதோடு, மின்சார பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் இந்த பகுதியில் ஏற்கனவே மின்மாற்றிகள் அமைக்கப்பட்டிருந்தும் அது யாருக்கும் பயன்படாத வகையில் இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்