மின் விளக்கு அமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே, வடகட்டளை கோம்பூர் மற்றும் கானூர் பகுதியில் இருந்து, வடகட்டளை மாரியம்மன் கோவில் வரை, வெள்ளையாற்றின் கரையோரத்தில் இரண்டு பக்கமும் மின் விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், கூத்தாநல்லூர்.