தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2022-08-14 13:08 GMT

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

தஞ்சாவூர் வட்டம் மேலவெளிஊராட்சி களிமேட்டிலிருந்து ரெட்டிபாளையம் செல்லும் சாலையில் பெரியார்நகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் எதிரே விவசாய மின்மோட்டாருக்குச் செல்லும் மின் கம்பிகளானது மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் மின் கம்பிகள் அருகில் உள்ள வீட்டை உரசிய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்பழகன், களிமேடு.

மேலும் செய்திகள்