தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4-வது வார்டு பஞ்சப்பள்ளி சாலையில் உள்ள மின்கம்பங்களில் சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் எரிய செய்ய வேண்டும்.
-கோவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.