உடன்குடி செல்வாசிட்டி பகுதியில் மின்மாற்றி உள்ளது. இதில் 4 சிமெண்டு தூண்களில் 2 சிமெண்டு தூண்கள் மிகவும் பழுதடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. தற்போது காற்று அதிகமாக வீசுவதால் ஏதேனும் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த மின்மாற்றியின் பழுதடைந்த சிமெண்டு தூண்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.