தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2022-08-10 16:22 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி கோழிமேக்கனூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அங்கு 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பகுதியையொட்டி அந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. அந்தபகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதுகுறித்து பல முறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், வெங்கடசமுத்திரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்