தர்மபுரி மாவட்டம் தொப்பூர் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை மற்றும் போலீஸ் குவார்ட்டர்ஸ் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலைகளில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து பல மாதங்களாகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே பழுதாகி எரியாத இரு உயர்கோபுர மின் விளக்குகளை சீர்செய்ய வேண்டும்.
-சுதாகர், தர்மபுரி.