ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

Update: 2022-08-06 14:34 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கு.அய்யம்பாளையம் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்கள் இருந்தன. மழையால் ஏற்பட்ட மண் அரிப்பால் அந்த மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மர் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

-சீனிவாசகோபால், கு.அய்யம்பாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்