புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே புதுப்பட்டி மெயின் ரோட்டில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பம் உடைந்த நிலையில் எப்ப வேண்டுமாலும் கீழே நிலையில் உள்ளது. இதனால் இந்த ரோட்டின் வழியாக ஏராளமான பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே மின்சார வாரியத்தின் உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.