கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் பிரதான தெருக்களில் சோலார் மின்விளக்குகள் மற்றும் சாதாரண மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு மற்றும் பகல் நேரங்களில் கூட இந்த மின்விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் மின்சாரம் சிக்கனம் ஆவது தடுக்கப்படுவதோடு, வீண் மின்சார செலவும் ஆகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் பகலில் எரியும் மின்விளக்குகளை கண்காணித்து அவற்றை இரவில் மட்டும் எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தினேஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.