மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், பெருந்தோட்டம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெரு ,பெரியார்தெரு ,நடுத்தெரு போன்ற பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதியில் முறையான மின்வினியோகம் இல்லாததால் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் மின்சாதனபொருட்கள் அடிக்கடி பழுதடைந்துவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருமுனை மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலைச்செழியன்,
பெருந்தோட்டம்.