மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சிவனாகரம் புது தெருவில் உள்ள மின் கம்பத்தில் , மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் சென்றால் மின் கம்பிகள் உரசும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், மயிலாடுதுறை