சென்னை ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால்வாய்காக பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டபட்டபோது எதிர்பாராத விதமாக பூமிக்கு அடியில் இருந்த மின்சார கேபிள் சேதமடைந்து விட்டது. நீண்ட நாட்களாகியும் சேதமடைந்த மின்சார கேபிள் சரி செய்யப்படவில்லை. மழை காலத்தில் மின் கசிவு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கேபிளை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.