நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சி காளியம்மன் கோவில் தெரு, வாணியத்தெரு போன்ற இடங்களில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அருகில் உள்ள கூரை வீடுகள் மீது மின் கம்பிகள் உரசி தீ விபத்து ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்த கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
பொதுமக்கள், திருப்பூண்டி.