நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராம நிர்வாக அலுவலக வாசலில் உயர் கோபுர மின் விளக்கு அமைந்துள்ளது.2013 -14 -ம் நிதியாண்டில் -ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது.இதனால் அந்தப் பகுதி இரவு நேரங்களில் இருட்டாக காணப்படுகிறது. இதன் காரணமாக வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருமருகல்