அகற்ற வேண்டிய மின்கம்பம்

Update: 2022-08-04 09:13 GMT

அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பட்டறை இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து இருந்தது. இதனால், அங்கு புதிய மின்கம்பம் நாட்டப்பட்டது. அதன்பின்பு பழைய மின்கம்பம் அகற்றப்படாமல் அதன் அருகிலேேய உள்ளது. அந்த பகுதியில் பல வீடுகள் உள்ள நிலையில் பயனற்ற மின்கம்பம் சாய்ந்து விழுந்து ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பழைய மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜஸ்டின், அழகப்பபுரம்.

மேலும் செய்திகள்