மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அல்லிவிளாகம் கிராமத்தில் விவசாய நிலங்கள் ஏராளம் உள்ளது. இதன் பிரதான சாலையில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி பல முறை சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அல்லிவிளாகம்