புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு செட்டியார் தெரு பகுதியில் மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் மீது கேபிள் டி.வி. வயர்கள் செல்வதால் இதிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே கேபிள் டி.வி. வயர்களை தனியாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.