மாற்ற வேண்டிய மின்கம்பம்

Update: 2022-08-01 16:21 GMT

ஓசூர் சானசந்திரம் கடவுள்நகர் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தவாறும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் துண்டாகி விழும் அபாயத்தில் உள்ளது. எனவே விபத்து எதுவும் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.முருகன், ஓசூர்

மேலும் செய்திகள்