திருப்பூர் மாநகராட்சி 4-வது வார்டு விக்னேஷ்வராக நகரில் மின் கம்பம் இருந்தது. கடந்த வாரம் அந்த மின் கம்பத்தில் மின் விளக்கு பொருத்தினார்கள். அதை தொடர்ந்து 5நாட்கள் மின் விளக்கு எரிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின்னர் மின்விளக்கு எரியவில்லை. அந்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ெதாடர்ந்து மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.