கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆவின் மேம்பாலம் அருகே உயர்மின் கோபுர விளக்கு உள்ளது. சேலம்-திருவண்ணாமலை, சென்னை-பெங்களூரு முக்கிய சந்திப்பு சாலையாக உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் உயர் கோபுர மின்விளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். அதிகாரிகள் உயர்கோபுர மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், கிருஷ்ணகிரி.