புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2022-07-30 13:48 GMT
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு மரந்தலை-குரும்பூர் சாலையில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து உள்ளதாகவும், அதை மாற்றக்கோரியும் தெற்கு மரந்தலையை சேர்ந்த போஸ் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதையடுத்து அந்த மின்கம்பத்தை அதிகாரிகள் மாற்றி உள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்