தெருவிளக்கு வேண்டும்

Update: 2022-07-26 17:27 GMT

தர்மபுரி 16-வது வார்டில் திருமண மண்டபம் அருகே சாலையில் இருந்த தெருவிளக்கை அகற்றிவிட்டதால் அங்கு இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், பெண்கள், நடைப்பயிற்சி செல்பவர்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் இந்த பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் மீண்டும் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

-மகேந்திரன், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

மேலும் செய்திகள்