கடலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மின்கம்பம் பலத்த சேதமடைந்து எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கிறது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.