சேலம் 51-வது வார்டு அன்னதானப்பட்டி, சாஸ்திரிநகர் ரோட்டில் சாக்கடை கால்வாய் மிகவும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீர் அந்த பகுதி முழுவதும் தேங்கி விடுகிறது. சாக்கடை கால்வாயின் மேல்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள மின்கம்பம் மிகவும் அரித்து, சேதமடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடுமோ என அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மின் வாரியத் துறையினர் விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்குமார், அன்னதானப்பட்டி, சேலம்.