கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிபாளையம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே செல்லும் மின்கம்பியில் செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்து வருகிறது. மின்கம்பி தெரியாத அளவுக்கு செடி, கொடிகள் வளர்ந்து வருவதால், அங்கு மின் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பியில் படர்ந்துள்ள செடி,கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.