தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி ஊராட்சி சின்னார்அணை மதகிற்கு கீழ் சாலையை உயர்த்துவதற்காக மண் கொட்டப்பட்டது. இதனால் சாலை உயரம் அதிகரித்து மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் ஆபத்தான நிலையில் செல்கிறது. அந்த வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விமலன், பஞ்சப்பள்ளி, தர்மபுரி.