கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில்வே மேம்பாலத்தில் பெரும்பாலான தெருமின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே தெருமின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.