சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா புளியம்பட்டி ஊராட்சியில் பெருமாள் கோவில் முதல் பம்பைகார்வட்டம் வரை உள்ள தெரு விளக்குகள் பல மாதகாலங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியே நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே எரியாத மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பழனிவேல், சேலம்.