மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த சித்தர்காடு -மறையூர் ஊராட்சிக்கு இடையிலான சாலையோரத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதன்காரணமாக கனரக வாகனங்கள், அறுவடை எந்திரங்கள் அந்த வழியாக செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. சாலையோரத்தில் உள்ள மரக்கிளைகளில் மின்கம்பிகள் சிக்கி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?