சுவிட்சு பெட்டி தேவை

Update: 2023-09-03 08:46 GMT

கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட இனயம் பழைய பள்ளித்தெரு திரும்பும் பகுதியில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் தெருவிளக்கிற்கான மீட்டர் மற்றும் பீஸ் கட்டை திறந்த வெளியில் உள்ளது. இதனால் மழை பெய்யும் போது நனைந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தெருவிளக்குகளும் அடிக்கடி எரியாமல் போகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவிட்சு பெட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்