நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் இருந்து செல்லப்பம்பட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் இந்த சாலையில் உயர் கோபுர மின் விளக்கு இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இருளை பயன்படுத்தி அந்த பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே புதன் சந்தையில் இருந்து செல்லப்பம்பட்டி செல்லும் சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளி, புதுச்சத்திரம்.