கடலூர் பீச்ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு மின்கம்பத்தை சூழ்ந்து செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.