தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-08-27 11:23 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் எடமணல் சுற்றுவட்டார பகுதியில் சாலையோரத்தில் மின்கம்பிகள் ஆங்காங்கே தாழ்வாக செல்கிறது. தாழ்வாக செல்வது மட்டுமின்றி மரக்கிளைகளை ஒட்டியபடி மின்கம்பிகள் செல்கிறது. இதன்காரணமாக பலத்த காற்று வீசும் போது மின்கம்பிகள் சேதமடைகிறது. மேலும், அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்