தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-08-16 17:56 GMT

ஈரோடு பவானி மெயின் ரோட்டில் அசோகபுரத்தில் உள்ள தனியார் மண்டபம் அருகே சாலையின் குறுக்கே மின்கம்பி மிகவும் தாழ்வாக தொங்கியவாறு செல்கிறது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது மின்கம்பி மீது உராய்ந்து தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்