எரியாத மின்விளக்குகள்

Update: 2023-08-16 17:17 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம். புதூரில் கிளை நூலக கட்டிடம் அருகே உள்ள உயர் கோபுரம் மின்விளக்கு சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி இருள் சழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்கள், வாகன ஓட்கடிள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எரியாத மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஜெயமணி, சி.எம்.புதூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்