சேதமடைந்த மின் கம்பம்

Update: 2023-08-16 14:52 GMT


நாகப்பட்டினம் நகரில் வருமான வரித்துறை அலுவலகம் அருகில் உள்ள மின் கம்பம் மிகவும் சேதம் அடைந்து,கான்கிரீட் கம்பிகள் பெயர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் போது மிகவும் அச்சத்துடனே செல்கின்றனர். மேலும் அருகில் வீடுகள் உள்ளதால் இந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்