கடலூர் அருகே உச்சிமேடு பகுதியில் இருந்து சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 கம்பங்களும் பலத்த சேதமடைந்து உள்ளது. மேலும் இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் மின்கம்பம் அதன் உறுதித்தன்மையை இழந்துள்ளதால், எப்போது வேண்டுமானலும் விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்மாற்றியை தாங்கி நிற்கும் பழைய கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.