மின்கம்பம் வச்சாச்சு... விளக்கு எங்கே?

Update: 2023-08-06 17:43 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியின் போது இடையூறாக இருந்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் நிறுவப்பட்டது. ஆனால் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் போது அதில் உள்ள தெருமின்விளக்குகளை பொருத்தவில்லை. சில இடங்களில் மின்விளக்குகள் இருந்தும் எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால், குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்