இருளில் மூழ்கிய பிரதான சாலை

Update: 2022-07-24 15:53 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ரோட்டில் வங்கிகள், வணிக வளாகங்கள், பிரபல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததால் இந்த பிரதான சாலை இருளில் மூழ்கி கிடக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் இந்த சாலை வழியாகத்தான் பஸ் நிலையம் செல்கிறது. எப்போதும் பரபரப்பாக செயல்படும் இந்த சாலையில் ஒருசில மின்கம்பங்களில் மின் விளக்குகளே இல்லாத நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த பிரதான சாலையில் போதுமான மின்விளக்குகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன், கோல்டன் தெரு, தர்மபுரி.

மேலும் செய்திகள்