நாகர்கோவில் மாநகராட்சி 29 வார்டில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த இடத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன், உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு, நாகர்கோவில்.