எரியாத மின்விளக்கு

Update: 2023-07-30 17:38 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே குட்லானஅள்ளி ஊராட்சி அலுவலகம் அருகே உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு சுமார் ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக எரியாததால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே எரியாத மின்விளக்கை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில், குட்லானஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்