தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-07-30 13:13 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் எடமணல் கிராமத்தில் திருநகரி செல்லும் சாலையோரத்தில் விளைநிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதன்காரணமாக விவசாயிகள் அச்சத்துடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அறுவடை எந்திரங்கள் வயலுக்குள் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்