மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி கோவில் சன்னதி எதிர்புறம் சாலையோரத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கடந்த சில நாட்களாக சரிவர எரிவதில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன்காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?