நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அண்ணா சிலை பஸ் நிறுத்தம் அருகே உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாததால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரஞ்சிதா, வெண்ணந்தூர்.