தஞ்சை-நாகை சாலையில் மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த மேம்பாலம் தஞ்சை ஜோதிநகர் அருகே தொடங்கி கும்பகோணம் சுற்றுச்சாலை வரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வசதிக்காக மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் சரிவர எரியவில்லை. இதன்காரணமாக இரவு நேரங்களில் மேம்பாலம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?